politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஒவ்வொரு நாளும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் எண் ணிக்கை வீழ்ச்சி அடைந்து கொண்டே உள்ளது. இப்பொழுதுதடுப்பூசிகள் உற்பத்தி எண்ணிகையைவிட மக்களுக்கு போடப்படும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒருநாளைக்கு சராசரியாக 25.80 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் 18.44 லட்சம்தான் போடப்படுகின்றன. மோடி அரசின் தடுப்பூசி கொள்கை என்பது முற்றிலும் தோல்வி!இதன் விளைவாக பல இந்தியர்கள் துன்பத்திலும் மரணத்தை நோக்கியும் தள்ளப்படுகின்றனர். இப்பொழுதாவது அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தைவேகமாக அமலாக்குங்கள்.

                                         *******************

இந்தியாவில் கோவிட் 19 முதல் ஒரு லட்சம் மரணங்கள் 206 நாட்களிலும் இரண்டாவது ஒரு லட்சம் மரணங்கள் 208 நாட்களிலும் நிகழ்ந்தன. ஆனால் மூன்றாவது ஒரு லட்சம் மரணங்கள் 27 நாட்களிலேயே நிகழ்ந்துள்ளன.மரணங்கள் தொடர்பான இந்த  சாதனை என்பது அதிகாரபூர்வமான தரவுகள் அடிப்படையில்! இந்த தரவுகள் மிகவும் குறைத்துமதிப்பிடப்பட்டவை என்பது உலகம் முழுவதும் அறியும். இன்னும் எத்தனை பேர் மரணக் குழிகளுக்குள் சபிக்கப்பட வேண்டும் பிரதமர் மோடி அவர்களே! தயவுசெய்து இலவசதடுப்பூசி திட்டத்தை போர்க்கால அடிப்டையில் அமலாக்குங்கள்.

                                         *******************

“மேக் இன் இண்டியா” எனும் மோடி வாயால் வடை சுட்டதன் உண்மை நிலை இதுதான்! “அன்னிய முதலீடு நம்பிக்கை” பட்டியலில் முதல் 25 இடத்தில்கூட இந்தியா இல்லை.  2017ம் ஆண்டு 8 வது இடத்தில் இருந்தஇந்தியா இன்று 25க்கும் கீழே சென்றுவிட்டது.

                                         *******************

சங்கிகளின் பதிவுகள் பொய்யானது என பதிவிட்ட டிவிட்டர்அலுவலகத்தில் காவல்துறை ரெய்டு. இந்த தருணத்தில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? மருத்துவ வசதிகள்/ மருந்துகள்/தடுப்பூசிகள் இவைதான் அவசர தேவை. மாறாக உள்துறை அமைச்சர் சமூக ஊடகத்தை மிரட்டவும் தமதுகுறுகிய நோக்கங்களுக்கு வளைக்கவும் காவதுறையை ஏவுகிறார்.

மனிதத்தன்மையற்றது! வெட்கக்கேடானது!!

                                         *******************

இந்தியாவில் கோவிட் மரணம் 3 லட்சத்தை தாண்டிவிட்டது. அதுவும் மூன்றாவது ஒரு லட்சம் மரணங்கள் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்துள்ளன.பிரதமர் மோடி அவர்களே கண்விழியுங்கள். உலகில் எங்கெங்குகிடைத்தாலும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள். உள்நாட்டில் உற்பத்தியை போர்க்கால அடிப்படையில் அதிகரியுங்கள். அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை உடனேதொடங்குங்கள்.

                                         *******************

பகட்டு மற்றும் ஆடம்பரமான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைகை விடுங்கள் எனும் மக்களின் கருத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி நிராகாரித்தார். இப்பொழுது உலகம் என்ன சொல்கிறது என்பதை கேளுங்கள். மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாமல் மரணிக்கின்றனர்; கங்கையில் உடல்கள் மிதக்கின்றன. இந்த திட்டத்துக்கான செலவைதடுப்பூசிகள்/ஆக்சிஜன்/மருந்துகள் வாங்க பயன்படுத்துங்கள்.

                                         *******************

மோடி/யோகியே நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

உங்களால் ஆக்சிஜனையும் தரமுடியவில்லை; மருந்துகளையும் தர முடியவில்லை; மருத்துவமனையில் படுக்கையையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை; தடுப்பூசியும் அனைவருக்கும் இல்லை.உயிர்வாழும் போதும் மரியாதை இல்லை; மரணத்திலும் இப்பொழுது அதனை பறிக்கிறீர்கள். நிகழ்ந்த அநியாய மரணங்களின் உண்மைகளை இப்படி மறைப்பதன் மூலம் நீங்கள் நம்பும் மறு உலக தீர்வு கூட உங்களுக்கு கிடைக்காது

                                         *******************

கடந்த ஏப்ரல் 1 முதல் மே 25 வரை மட்டும் 577 குழந்தைகள் இரண்டு பெற்றோரையும் இழந்துள்ளனர். இந்த குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுப்பது குற்றமாகும் என அரசு எச்சரிக்கை.இத்தகைய எச்சரிக்கைகள் மட்டும் போதாது. இந்த குழந்தைகளை மத்திய அரசு தனது நவோதய வித்யாலயா உறைவிடபள்ளிகளில் தங்கவைத்து கல்விக்கு உத்தரவாதம் செய்யவேண்டும். வேலைவாய்ப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் வழிவகுக்க வேண்டும்.

                                         *******************

லட்சத்தீவுகளில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகியின் முடிவுகள் அப்பட்டமான அரசியல் சட்ட மீறல்கள் ஆகும். குடிமக்களுக்கு அரசியல் சட்டம் தரும் அனைத்துஉரிமைகளையும் இந்த முடிவுகள் சிதைக்கின்றன. இவரின் முடிவுகள் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பது மட்டுமல்ல;இந்த நபர் அந்த பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும்.அரசியல் சட்ட உரிமைகளை கொடூரமாக மீறியதை லட்சத்தீவு நிர்வாகம் அப்பட்டமாக நியாயப்படுத்துகிறது.  நிர்வாகி பிரபுல்கோடா பட்டேலை பதவியிலிருந்து நீக்குங்கள். அவரது ஆணைகள் முழுவதையும் திரும்பப் பெறுங்கள்.

                                         *******************

பொருளாதார மந்தம் ஆழமாகிக் கொண்டுள்ளது. அனைத்து பொருளாதார குறியீடுகளும் இறங்கு முகத்தில்! பெருந்தொற்று பேரழிவின் காரணமாக மக்கள் வாழ்வு பெரும் துன்பத்தில்!நேரடி நிதி உதவியும் இலவச உணவு தானியங்களும் தாருங்கள்.மக்களை வாழவிடுங்கள். அதன் மூலம் உற்பத்தி பொருட்களின் தேவை அதிகரிக்கும். அது பொருளாதார மீட்சிக்கு வழி வகுக்கும்.

                                         *******************

வேலை வாய்ப்புகள் காற்றில் கரைந்து கொண்டுள்ளன; பெட்ரோல் விலை பல இடங்களில் 100 ரூபாய்; சமையல்எண்ணெய் வகைகள் ஒரு ஆண்டில் 62 சதவீதம் விலை உயர்வு.ஒரு வேளை பெருந்தொற்றில் நாம் உயிர் பிழைத்தாலும் வருமானமின்மையும் விலை உயர்வும் நம்மை நசுக்கிவிடும் போல உள்ளது. மனித அக்கறை சிறிதும் அரசுக்கு இல்லை. தயவுசெய்து வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ள குடும்பங்களுக்கு நிதிஉதவியும் இலவச உணவு தானியங்களும் தாருங்கள்.

                                         *******************

ஏப்ரல் மாதத்தில் 8.9 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் மே மாதம் 25 ஆம் தேதி வரை 4.4 கோடிக்கு அதாவது 4.5 கோடிக்கு குறைவாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தொற்றும் மரணங்களும் பீதி தரும் சாதனைகளை உருவாக்கிக் கொண்டுள்ள இந்த தருணத்தில் தடுப்பூசிகள் செலுத்துவது வெகுவாக குறைகிறது.

என்ன செய்கிறீர்கள் பிரதமர் மோடி அவர்களே?

உலகமெங்கும் கிடைக்கும் தடுப்பூசிகளை வாங்குங்கள். உள் நாட்டு உற்பத்தியை அதிகரியுங்கள். அனைவருக்கும் இலவச தடுப்பூசிகளை போடுங்கள்.

                                         *******************

வேலைவாய்ப்புகள் இல்லை

*    பெருந்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு இல்லை

*    ஆக்சிஜன் இல்லை

*    மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை

*    மரணத்திற்கு பின்னரும் மரியாதையுடன் இறுதி சடங்கு இல்லை.

*    பசிக்கு உணவு இல்லை.

*    வேலையிழந்தோருக்கு நிவாரணம் இல்லை

*    ஆனால் பெட் ரோல் மட்டும் “செஞ்சுரி” அடிக்கிறது

*    மக்களின் துன்பம் உயர்கிறது.

                                         *******************

பெருந்தொற்றும் மரணமும் இன்னும் அதிகமாக இருக்கும் பொழுது தடுப்பூசிகள் செலுத்தப்படுவது குறைந்து வருகிறது. தடுப்பூசிகளை சர்வதேச சந்தையில் வாங்குங்கள். உள்நாட்டு உற்பத்தியை அதிகரியுங்கள். இலவச தடுப்பூசி திட்டத்தை அமலாக்குங்கள்.

கோவாக்சின் 6 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் ஆனால் 2.1 கோடிதான் மாநிலங்களுக்கு தரப்பட்டதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது. அப்படியானால் மீதி 4 கோடி எங்கே? இந்த குளறுபடிகளுக்கு பிரதமர் மோடி தெளிவான பதிலை தெரிவிக்க வேண்டும். பி.எம்.கேர்ஸ் நிதி போல தடுப்பூசிகளிலும் தகிடுதத்தம் நடக்கிறதா? பதுக்கலும் கறுப்பு சந்தை பிரச்சனையும் உருவாகிறதா? மக்களைப் பற்றி கவலைப்படாமல் இத்தகைய சூழலை உருவாக்குவது மிகவும் கொடூரமானது.

;