politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஒரு புறம் பெருந்தொற்று காட்டுத்தீ போல பரவி உயிர் களை பலிவாங்கி கொண்டுள்ளது. மறுபுறம் தடுப்பூசி திட்டத்தில் கடும் வீழ்ச்சி. ஏப்ரல் 14ல் 34.7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், மே 14ல் 18.7 லட்சம் பேருக்கு தான் என்று வீழ்ந்துள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி உடனடியாக தொடங்குக!

                               ******************

உலகில் உள்ள பல நாடுகள் தடுப்பூசி கொள்முதலுக்கான ஆணைகள் பிறப்பித்த விவரங்களை ‘டூக் குளோபல் ஹெல்த் இன்னோவஷன் சென்டர்’ எனும் அமைப்பு தொகுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா 4% மக்களுக்கு மட்டுமே (இரண்டுசுற்றுகளும் சேர்த்து) கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இது மிகவும் மோசமான செயல்பாடு. 

*    உலகில் எங்கெங்கு தடுப்பூசி கிடைக்கின்றதோ அங்கெல்லாம் உடனடியாக வாங்குங்கள்.

*    கட்டாய அனுமதி அடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரியுங்கள். 

* அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்குங்கள். இது ஒன்றுதான் பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும் உயிர் களைக் காப்பாற்றவும் உள்ள ஒரே வழி.

                               ******************

தடுப்பூசிகள் பெருமளவு போடப்பட்ட இடங்களில் ஆக்சிஜன்தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதைத் தொடக்க நிலை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ளவும் உயிர்களை காப்பாற்றவும் ஒரே வழி அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள்தான்! இதனைஉடனடியாக செய்யுங்கள்.

                               ******************

அனைவருக்கும் இலவச தடுப்பூசி எனும் இலக்கை நோக்கிவேகமாக நகர வேண்டிய இந்த நேரத்தில் தடுப்பூசி போடப்படும் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. இரண்டாவது அலை கிராமப்புறங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.ஆனால் மொத்த தடுப்பூசிகளில் 15% மட்டுமே கிராமப்புறங் களில் போடப்பட்டுள்ளது.  வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலிருந்தும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள்! கட்டாய உரிமம் அடிப்படையில் உள்நாட்டில் போர்க்கால அடிப்படையில் உற்பத்தி அதிகரியுங்கள். மக்கள் உயிர் பறிபோவதைத் தடுங்கள்.

                               ******************

வழக்கம் போல தடுப்பூசி உற்பத்தி பற்றிய விவரங்களில் மோடி அரசாங்கம் கூறுவதற்கும் உண்மை நிலைக்கும் இடைவெளி உள்ளது. திட்டமிடப்பட்ட உற்பத்தி பற்றிய அரசின் கணக்கு 216 கோடி; நிறுவனங்களின் கணக்கு 165 கோடி மட்டுமே! தடுப்பூசிகளை உலகம் முழுவதும் கொள்முதல் செய்யுங்கள்; உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்துங்கள்.

                               ******************

தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை சரிந்து கொண்டே இருக்கிறது. பல தடுப்பூசி திட்டங்களை மிகவெற்றிகரமாக செய்து காட்டிய நமது தேசம் “தடுப்பூசி வெளியுறவு ராஜதந்திரம்” என ஏற்றுமதி செய்த காரணத்தாலும் காலத்தேகொள்முதல் ஆணைகள் போடாத காரணத்தாலும் இன்று மிகப்பெரிய மனித நெருக்கடியில் சிக்கியுள்ளோம். 

                               ******************

இது கிரிமினல் குற்றம்! 6 வாரங்களில் தடுப்பூசி செலுத்துவது 67% வீழ்ச்சி. மோடி என்னதான் செய்கிறார்? வரலாறுகாணாத மனித அழிவுக்கு தலைமை தாங்குகிறார். அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை உடனே தொடங்குங்கள்.

                               ******************

கும்பமேளா நடந்த ஹரித்துவாரில் ஒரு மருத்துவமனையில் மட்டும் 65 மரணங்கள் குறைத்துக் காட்டப்பட்டுள்ளன. வைரசின் இரண்டாவது அலை தொடங்கிய பிறகும் மோடியே தேசமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்தார். இப்பொழுது இதன் விளைவாக நிகழ்ந்த மரணங்கள்மறைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடமிருந்து ஆபத்தான வைரஸ் சிறிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவியுள்ளது.

                               ******************

யார் இதற்கு பொறுப்பு? மோடி பொறுப்பேற்றுக் கொள்வாரா? டுவிட்டரில் அஞ்சலி செய்தி பதிவு செய்தால் மட்டும் போதுமா? தடுப்பதற்கு வாய்ப்பிருந்தும் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இதற்கு பொறுப்பு யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை.

                               ******************

கடந்த  4 மாதங்களில் வேலையின்மை விகிதம் 6.5%லிருந்து7.9%ஆக உயர்ந்துள்ளது. மக்கள் மீது இரட்டை தாக்குதல்அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருபுறம் பெருந்தொற்றுப் பேரழிவு வாழ்வது என்பதையே பெரும் கடினமாக மாற்றியுள்ளது. மறுபுறம் வேலை இழப்புகள் மலைபோல உயர்கின்றன. வேலைஇழந்த ஏழைகளுக்கு ரூ 6000 கொடுங்கள். வருமான வரி வரம்புக்கு வெளியே இருப்பவர்களுக்கு ரூ.7500 தாருங்கள்.

                               ******************

11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 10.49%உயர்வு. கடந்த 14 நாட்களில் பெட்ரோல் 10 முறை உயர்வு. ஏப்ரலில் மட்டும்34 லட்சம் வேலைவாய்ப்புகள் இழப்பு. பெரும்பாலான முறைசாரா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பிரதமர் அவர்களே! துன்பப்படும் மக்களுக்கு நேரடி நிதி உதவியும்இலவச உணவு தானியங்களும் உடனடியாக தருக!2020ம் ஆண்டு கோவிட் 19 நிலைமை மோசமான பொழுது உலகின் பல்வேறு மத்திய வங்கிகள் 9 டிரில்லியன் டாலர்களை பொருளாதாரத்தில் முதலீடு செய்தன. இதன் பெரும்பகுதி மக்களை சென்று அடையவில்லை. மாறாக நிதிச் சந்தைகளுக்கும் அங்கிருந்து டாலர் பில்லியனர்களுக்கும் போய்ச் சேர்ந்தது. உலக டாலர் பில்லியனர்களின் சொத்து 5 டிரில்லியனிலிருந்து 9 டிரில்லியனாக உயர்ந்தது. ஒரே ஆண்டில் அவர்கள் கொள்ளையடித்த சொத்தின் மதிப்பு ரூ6,75,00,000 கோடி!

                               ******************

கிராமப்புறங்களில் கோவிட் பெரும் அழிவுகளை உருவாக்கிகொண்டுள்ளது எனவும் குடும்பம் முழுவதுமே பாதிக்கப்படுகின்றனர் அல்லது மரணிக்கின்றனர் எனவும் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. பல குடும்பங்கள் வருமானம் ஈட்டுபவரை இழந்து தவிக்கின்றன. இத்தகைய குடும்பங்கள் உயிர்வாழ வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ள குடும்பங்களுக்கு மத்திய அரசாங்கம் ரூ7500 தரவேண்டும்; ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி இலவசமாக தரவேண்டும். இதனை உடனடியாக செய்யுங்கள்.

                               ******************

கிராமப்புற வேலையின்மை 14%க்கு செங்குத்தாக உயர்வு!ஆனால் மத்திய அரசாங்கம் இதனை கண்டு கொள்ளாமல் அப்படிப்பட்ட நிலைமை இல்லவே இல்லை என மறுக்கிறது. எதிர்கட்சிகளை தாக்குவதிலேயே முனைப்பு காட்டுகிறது. அக்கறையற்ற இந்த அரசாங்கம் காரணமாக இந்தியா மிகப்பெரியவிலையை தந்து கொண்டுள்ளது.

                               ******************

வேலையின்மை கட்டுகடங்காமல் உயர்ந்து கொண்டுள் ளது. தாங்கமுடியாத துன்பங்களை அது விளைவிக்கிறது. சுமார் 5.3 முதல் 5.5 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை என்பது எட்டாக்கனியாக உள்ளது. மாதம் ரூ.7500 நேரடி நிதி உதவியும்இலவச உணவு தானியங்களையும் தருவது உடனடி தேவை. பிரதமர் அவர்களே உடனே செயல்படுங்கள்.

                               ******************

மோடி மாடல் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டது. 90% மக்கள் தாம் உண்ணும் உணவின் அளவை வெட்டவேண்டிய நிலை! 23 கோடி பேர் வறுமையில் வீழ்ந்துள்ளது. இரண்டாவது அலையில் நிலைமை மோசமாக உள்ளது. பிரதமர் மோடி அவர்களே! ஏழைகளுக்கு நேரடி நிதி உதவியும் இலவச உணவு தானியங்களையும் உடனடியாக தாருங்கள்.

                               ******************

“சென்ற ஆண்டை ஒப்பிடும்பொழுது கடந்த 3 மாதங்களில் 7 மாவட்டங்களிலிருந்து நர்மதா நதியில் 22,250கூடுதல் அஸ்திகள் கரைக்கப்பட்டுள்ளன. ஆனால் 33 மாவட்டங்களை கொண்ட குஜராத் முழுவதும் 5430 தான் கோவிட் மரணங்கள் என மாநில அரசாங்கம் கூறுகிறது” என குஜராத் சமாச்சார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இத்தகைய சுய ஏமாற்று சுய தோல்வியில்தான் முடியும். தரவுகளில் தகிடுதத்தம் செய்வதன் மூலம் எவரையும் முட்டாளாக்க முடியாது. இந்தியாவில் கணக்கில் காட்டப்படுவதைவிட 3 முதல் 5 மடங்கு அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன என உலக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். பிரதமர் மோடி அவர்களே! அனைவருக்கும் இலவச தடுப்பூசி மட்டும்தான் கூடுதல் மரணங்களையும் இந்த பேரழிவையும் தடுக்க முடியும்.

                               ******************

இந்த ஆண்டு இறுதிக்குள் 200 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என கூறுகிறது அரசாங்கம். ஆனால் இந்த கணக்குஏட்டளவில்தான் இருக்கப்போகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். வெற்றுப் பிரச்சாரமும் வாய்ப்பந்தலும் கோடிக்கணக்கான மக்களை துன்பத்தில் தள்ளிக்கொண்டிருக்கின்றன. எங்கெங்கு கிடைக்கின்றனவோ அங்கெல்லாம் தடுப்பூசிகளை வாங்குங்கள். உள்நட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரியுங்கள்.

                         #####################

எமது செந்தொண்டர்களுக்கு சல்யூட்!

இந்த கொடூரமான பேரழிவு காலத்தில் ஆறுதல் தரும்அம்சம் என்னவெனில் ஒருவருக்கொருவர் உதவிடும்மனிதகுலப் பண்புதான். மத்திய அரசாங்கம் தரவுகளில் தகிடுதத்தம் செய்தும் பொய்ப் பிம்பம் கட்டமைத்தும் தனது
பொறுப்பைக் கை கழுவும் இதே வேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாரம்பரிய வழியில் பல மாநிலங்களில் மக்கள் சேவை செய்து வருகிறது.ஆந்திராவில் அநேகமாக கட்சியின் அனைத்து அலுவலகங்களும் கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுவிட்டன. மேற்கு வங்கத்தில் பாஜக மத அடிப்படையில் கலவரங்களை திட்டமிடும் பொழுது மார்க்சிஸ்ட் கட்சியோ தேர்தல் தோல்விக்கு பின்னரும் சுமார் லட்சம் ஊழியர்ளைக் களத்தில் இறக்கி உதவி செய்த வண்ணம் உள்ளது. இதே போல பல மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி களத்தில் உள்ளது. பல ஊடகங்களே இதனை பதிவு செய்து பாராட்ட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.தன்னலம் பாராது 24 மணி நேரமும் களப்பணியாற்றும் எமது செந்தொண்டர்களுக்கு சல்யூட்.
 

;