துபாய் துணை ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
துபாய் ஆட்சியர் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் சகோதரர் ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் (75). இவர் கடந்த 1971-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். 1995 -ஆம் ஆண்டில் இருந்து துபாயின் துணை ஆட்சியாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்த ஷேக் ஹம்தான் சிகிக்கை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தியை துபாய் ஆட்சியாளரும், அவரது சகோதரருமான ஷேக் முகமது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் மறைவையொட்டி , துபாயில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.