கூகுள் டுவோ விளம்பரத்தில், மென்பொருள் கோளாறு காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
கூகுள் டுவோ விளம்பரத்தில், மென்பொருள் கோளாறு காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கான வாழ்த்துச் செய்தியை தவறுதலாக உலகம் முழுவதும் உள்ள பல வாடிக்கையாளர்களுக்கு பகிரப்பட்டது.
கூகுள் டுவோ என்ற கூகுளின் வீடியோ அழைப்புக்கான செயலியை இந்தியாவில் விளம்பரப்படுத்தும் நடவடிக்கையில் கூகுள் இறங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில், ”உங்களது ஆதரவுக்கு நன்றி. இந்திய அணியை ஊக்கப்படுத்துங்கள்” என்று விராட் கோலி பேசுவது போன்ற வீடியோ, இந்திய வாடிக்கையாளர்களுக்கு பகிரப்பட்டது. ஆனால் இந்த விளம்பரத்தை, பல்வேறு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பப்பட்டது.
இதுதொடர்பாக ஒரு வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு விலக்கம் அளிக்கும் வகையில்,மென்பொருள் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ளது.