india

img

உள்ளூர் ராமர் கோயில்களே போதும்.... அயோத்தியில் கோயில் தேவையில்லை.... டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ வித்யாசாகர் ராவ் அதிரடி....

ஹைதராபாத்:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி வசூலில் இந்துத்துவா அமைப்புக்கள் தீவிரம் காட்டி வருகின்றன. மூன்று நாட்களில் மட்டும் ரூ. 100 கோடியை அள்ளிக் குவித்த அவர்கள், நாடு முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று, சுமார் 65 கோடி பேர்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாயைவசூலிப்பது என்று திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர்கோயிலுக்கு தெலுங்கானா மாநில மக்கள் யாரும் நன்கொடைகள் கொடுக்க வேண்டாம் என்று அம்மாநில ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ வித்யாசாகர் ராவ்  வீடியோவெளியிட்டுள்ளார். “இப்போது அவர்கள் (ஆர்எஸ்எஸ்- பாஜகவைச் சேர்ந்தவர்கள்) ராமர்கோயில் கட்டப் பணம் கேட்டுப்புதிய வசூலைத் தொடங்கியுள்ளனர். நாம், நமது கிராமங்களில் ராமர்கோயில்களைக் கட்ட மாட்டோமா என்ன? உ.பி.யில் ராமர் கோயில் கட்டுவதென்பது அவர்களின் புதியவேஷம். அவர்கள் ராம பக்தர்கள் மட்டுமல்ல, பக்தர்களே அல்ல.

எனவே, உ.பி.யில் கட்டும் ராமர்கோயிலுக்கு யாரும் நன்கொடைகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கிராமத்திற்கு யார் நன்கொடை கேட்டு வந்தாலும், ‘நாங்கள் ராமர் கோயிலை எங்கள் கிராமத்திலேயே கட்டிக் கொள்வோம்,உத்தரப் பிரதேசத்தில் தேவையில்லை’ என்று சொல்லுங்கள்” என்றுவித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.

டிஆர்எஸ் எம்எல்ஏ வித்யாசாகர் ராவின் இந்தப் பேச்சு தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆத்திரமடைந்த பஜ் ரங் தள் அமைப்பினர், அவரது உருவபொம்மையை எரித்து ஹைதராபாத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து, இந்துக்களுக்குஎதிராக தாம் பேசவில்லை. பாஜகவை அம்பலப்படுத்தவே இவ்வாறு கூறினேன் என்று வித்யாசாகர் ராவ் விளக்கமளித்துள்ளார்.

;