india

img

காங்கிரஸ் எம்.பி வசந்த்ராவ் சவான் காலமானார்!

மகாராஷ்டிரா மாநிலம் நான்தேட் தொகுதியின் எம்.பி வசந்த்ராவ் சவான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
மகாராஷ்டிரா மாநிலம் நான்தேட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்ராவ் சவான், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனை காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் உயிரிழந்தார்.