india

img

கங்காவரம் துறைமுகத்தையும் கைப்பற்றுகிறார் அதானி.... 31 சதவிகித பங்குகளை ரூ. 1954 கோடிக்கு வாங்க ஒப்பந்தம்.....

விசாகப்பட்டினம்:
இந்திய துறைமுகங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றிவரும் அதானி துறைமுகங்கள் நிறுவனம், தற்போது ஆந்திர மாநிலம் கங்காவரம் துறைமுகத்திலும் (Gangavaram Port Ltd. - GPL) கால் வைத்துள்ளது.

அந்த துறைமுகத்தில், ‘லேக்சைடு இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட்’ (Windy Lakeside Investment) வைத்திருந்த 31.5 சதவிகிதபங்குகளை, ரூ. 1 ஆயிரத்து 954கோடிக்கு தாங்கள் வாங்கியிருப்ப தாக, ‘அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் லிமிடெட்’ (Adani Ports and Special Economic Zones (APSEZ) Ltd) அறிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில், நாட்டின்2-ஆவது பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார். சுரங்கம், மின்சாரம், எரிவாயு, ரயில்வே, விமான நிலையங்கள், வேளாண் வர்த்தகம், சொகுசுக் கப்பல்கள் இயக்கம், ராணுவத்திற்கு ஆயுதங்கள் தயாரிப்பு என்று இந்தியாவின் முக்கியத் தொழில்கள் அனைத்தையும் கபளீகரம் செய்துவருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராகவும் அவர் உருவெடுத்துள்ளார்.

குஜராத்தில் முந்த்ரா, தஹேஜ், டுனா மற்றும் ஹசிரா, ஒடிசாவில் தம்ரா, கோவாவில் மோர்முகாவோ, ஆந்திராவில் விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணப்பட்டினம், சென்னை காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களை அதானி நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. நாட்டின் மொத்த துறைமுகத் திறனில் 24 சதவிகிதம் தற்போது அதானி கைவசம்தான் உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கங்காவரம் துறைமுக நிறுவனத்திலும் 31.5 சதவிகித பங்கு
களை- அதாவது, பங்கு ஒன்று ரூ. 120என்ற விலையில், மொத்தம் 16.3 கோடிபங்குகளை - ரூ. 1 ஆயிரத்து 954 கோடிக்கு, ‘விண்டி லேக்சைடு இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட்’ நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது. கங்காவரம் துறைமுகமானது, ஆண்டுக்கு 64 மில்லியன் மெட்ரிக் டன் (64 Million Metric Tonnes) அளவிலான சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாகும். நடப்பு நிதியாண்டில் மட்டும், கங்காவரம் துறைமுகம் 34.5 மில்லியன் மெட்ரிக் டன்சரக்குகள் அளவைக் கையாண்டது டன், ரூ. ஆயிரத்து 82 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இயக்க வருமானம் (Operating Revenue) ரூ. 634கோடியாக உள்ளது.

நிகர லாபமோ ரூ. 516 கோடியாகும். கடன் என்று எதுவும் இல்லை. மாறாக, 500 கோடி ரூபாய் இருப்பு வைத்துள்ளது. 2059-ஆம் ஆண்டுவரை இந்த துறைமுகத்திற்கு அரசாங்கத்தின் பல்வேறு சலுகைகளும் உள்ளது.அதுமட்டுமல்ல, விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள கங்காவரம் துறைமுகம் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இந்தியா முழுவதும்எட்டு மாநிலங்களுக்கான நுழை வாயிலாக உள்ளது. இங்கிருந்து நிலக்கரி, இரும்புத் தாது, விவசாயஉரம், பாக்சைட், சர்க்கரை, அலுமினியம், ஸ்டீல் ஆகிய பொருட்களைக் கையாள முடியும். விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ளதால், கங்காவரம் துறைமுகம் உள்ளது. எனவே, இந்த 8 மாநிலங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தேவைகளை முழுமையாகப் பூர்த்திச் செய்ய முடியும் என்றெல்லாம் கணக்குப் போட்டுத்தான் அதானி கங்காவரம் துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளார்.தற்போது 31.5 சதவிகித பங்கு
களைதான் அதானி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 58.1 சதவிகித பங்குகளை (சுமார் 30 கோடி பங்குகள்) டிவிஎஸ் ராஜூ (DVS Raju & Family) குடும்பமும், 10.4 சதவிகித பங்குகளை ஆந்திர அரசும்வைத்துள்ளன. எனினும், துறைமுகத் தொழிலில் டிவிஎஸ் ராஜூ குடும்பம் பெரிதாக ஆர்வம் காட்டாததால், ஒட்டுமொத்த துறைமுக நிர்வாகமும் அதானி கட்டுப்பாட்டிற்கு போவது தடுக்க முடியாத ஒன்று என்கின்றனர்.

அதற்கேற்ப, கங்காவரம் துறைமுகத்தைக் கைப்பற்றியவுடன் இங்குள்ள சுமார் 1,800 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி, தற்போதுள்ள 9 பெர்த்தை 31 பெர்த்துக்களாக அதிகரித்து, ஆண்டுக்கு 250 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாக துறைமுகத்தை மாற்றவும், அதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்க்கவும் அதானி இப்போதே தயாராகி வருகிறார்.

;