india

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.... ஹைதராபாத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ஆலோசனை....

ஹைதராபாத்:
கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துரிதப்படுத்துவது தொடர்பாகபாரத் பயோடெக் உற்பத்தி நிறுவனத்துடன் ஒன்றிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஒன்றிய ரசாயனங்கள் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், ஒன்றியஉள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும் ஹைதராபாத் தில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை ஆய்வு செய்வதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசித் தயாரிப்பு மற்றும் உயிரி பாதுகாப்பு மூன்றாவது கட்ட மையங்களை பார்வையிட்டனர். மருந்தகங்கள் துறையின் செயலாளர் அபர்ணாவும் உடனிருந்தார். அப்போது பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனை வருக்கும் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தி யாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதிபூண்டி ருப்பதாகத் தெரிவித்தார்.தடுப்பூசிகளின் உற்பத்தியை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் உற்பத்தியாளர்களுடன் அமைச்ச ர்கள் ஆலோசனை நடத்தினர்.

;