india

img

ராஜஸ்தான் நகராட்சி தேர்தல்... காங்கிரஸ் ஆதிக்கம்....

ஜெய்ப்பூர்
சமீபத்தில் நிறைவு பெற்ற ராஜஸ்தான் மாநில நகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. 20 மாவட்டங்களுக்கான 90 நகராட்சிகளில் உள்ள 3035 வார்டுகள் நடத்தப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் கட்சி 1197 வார்டுளிலும், பாஜக 1140 வார்டுளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 634 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் 46 வார்டுகளிலும், ஆர்எல்பி 13 வார்டுகளிலும்,  சிபிஎம் 3 வார்டுளிலும்,  பகுஜன் சமாஜ் கட்சி 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் பலம் சரிசமமாக உள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவின் மூலம் காங்கிரஸ் கட்சி தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி இந்த தேர்தலில் அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பொழுதிலும் காங்கிரசை விட 57 வார்டுகள் குறைவாக பெற்று தோல்வியை கண்டுள்ளன.  

;