india

img

ரூ. 35 லட்சத்துக்கு விற்கப்பட்ட நீட் வினாத்தாள்? ஜெய்ப்பூரில் மாணவி, பயிற்சி மைய நிர்வாகிகள் உட்பட 8 பேர் கைது....

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் ரூ. 35 லட்சத்துக்குவிற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச் சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர்,வினாத்தாளை தனது மொபைலில்புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.அது கசிந்து பலருக்கும் பரவியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ‘ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி’ தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய குறிப்பிட்ட மாணவிஉட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து போலீஸ்துணை ஆணையர் ரிச்சா தோமர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.“நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்குமதியம் 2 மணி முதல் 5 மணி வரைதேர்வு நடைபெற்றது. அந்த மையத் தில் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இங்குதான் தானேஸ்வரி என்ற அந்த மாணவிதேர்வு எழுதச் சென்றிருந்தார். இந்தச் சம்பவத்தில் தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர் ராம் சிங்கும் உடந்தையாக இருந்துள்ளார். இவருக்கு நவரத்னா என்பவருடன் பழக்கம்இருந்துள்ளது. நவரத்னா பன்சூரில் நீட்தேர்வு பயிற்சி மையம் நடத்துகிறார். அவரது நண்பர் அனில் யாதவ் ‘இமித்ரா’ என்ற பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது அண்டைவீட்டுக்காரர் சுனில் யாதவ். இவரது உறவுக்காரப் பெண் தான் தானேஸ்வரி.

இவர், ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட்ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மையத்தில் தேர்வு எழுதவிருந் தார். தானேஸ்வரிக்காகவே நீட் தேர்வுவினாத்தாள் விலை பேசப்பட்டுள்ளது. தானேஸ்வரியின் மாமா பேரம் பேச ரூ. 35 லட்சத்துக்கு வினாத்தாள் விற் பனைக்கு ‘டீல்’ முடிக்கப்பட்டது. தானேஸ்வரி தேர்வு எழுதிய மையத்திலிருந்து ராம்சிங் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த மொபைல் போன் மூலம் புகைப்படம்எடுத்து வினாத்தாளை தானேஸ்வரியின் மாமாவுக்கு அனுப்பினார்.அவரது மாமா வினாத்தாளை நீட் தேர்வு பயிற்சி மைய ஆட்களுக்கு அனுப்பி வைத்தார். பங்கஜ் யாதவ், சந்தீப் என இருவரும் சேர்ந்து தேர்வுத்தாளில் விடைகளை மார்க் செய்து அனுப்பினர். ராம்சிங்குக்கும், கல்லூரிநிர்வாகி முகேஷ் சமோடாவுக்கும் விடைத்தாளை அனுப்பினர்.இதை அறிந்து கொண்ட போலீசார்தேர்வு மையத்திலிருந்த தானேஸ்வரியிடமிருந்து விடைத்தாளையும் வினாத்தாளையும் பறிமுதல் செய்தனர். தேர்வு மையத்துக்கு வெளியிலேயே காரில் ரூ. 10 லட்சம் பணத்துடன்தானேஸ்வரியின் மாமா காத்திருந்துள்ளார்.இந்த விடைத்தாள் மொபைல் வாயிலாக சிகார் மாவட்டத்திலிருந்த இருவருக்கும் கசிந்தது. அதனடிப்படையில், சிகாரைச் சேர்ந்த சுனில்ரின்வான், தினேஷ் பெனிவால் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.”இவ்வாறு போலீஸ் துணை ஆணையர் ரிச்சா தோமர் தெரிவித்துள்ளார்.

;