india

img

காலத்தை வென்றவர்கள் : கோவிந்த் பன்சாரே நினைவு நாள்....

தோழர் கோவிந்த் பன் சாரே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முதுபெரும் கம்யூனிஸ்ட். 1964 இல்வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். கோலாப்பூர் வழக்கறிஞர்கள் மன்றத் தின் தலைவராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். மூடநம்பிக்கைகளுக்கும் சனாதனத்திற்கும் இந்துத்துவா கொள்கைகளுக்கும் எதிராக எழுதியும் பேசியும் வந்தார்.

சுங்கச் சாவடிகளின் முறையற்ற வரி வசூல்போக்கை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். கோவிந்த் பன்சாரே 21 நூல்களை எழுதினார். அவை பெரும்பாலும் சமூகக் கேடுகளைச் சுட்டிக்காட்டுவன ஆகும். ‘சிவாஜி யார்?’ என்னும் நூலை எழுதியதால் பெரும்திறனாய்வுக்கு உள்ளானார்.2015 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 16 ஆம்நாள் அன்று பன்சாரே தம் மனைவி உமாபன்சாரேவுடன் நடைபயணம் மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இருவர்அவர்களைத் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றனர். பன்சாரேவின் உடல் நிலை கேடுற்றதால் அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி 20 இல் காலமானார். அவரது மனைவி காயங்களுடன் உயிர் தப்பினார்.
மத்தியிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பா.ஜ.க தலைமையிலான அரசுகள் கோலோச்சிய கால கட்டத்தில்தான் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். அவரது படுகொலையின் பின்னால் ‘சனாதன் சன்ஸ்தா’ எனும் சங்பரிவார அமைப்பு இருந்துள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது. எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மத்திய அரசின் பாசிசத் தன்மையையே காட்டுகிறது.

;