india

img

பிற்படுத்தப்பட்டோர் விவரங்களைப் பெற விடாமல் பாஜக தடுப்பது ஏன்? மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கேள்வி....

மும்பை:
“பிற்படுத்தப்பட்டோர் குறித்த புள்ளி விவரங்களைப் பெற விடாமல் பாஜக எம்எல்ஏ-க்கள் தடுப்பதுஏன்?” என்று மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகரைத் தாக்க முயன்ற சம்பவம் திங்களன்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக, பாஜக எம்எல்ஏ-க்கள் 12 பேர் ஓராண்டுக்கு இடை நீக்கம்செய்யப்பட்டனர். இதனை ஜனநாயகப் படுகொலை என்று பாஜகவினர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் பாஜகவினருக் குப் பதிலளித்து, மகாராஷ்டிர முதல் வர் உத்தவ் தாக்கரே பேட்டி ஒன்றைஅளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“திங்கட்கிழமை நடந்த சம்பவம் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிஅரசை கவிழ்க்க மேற்கொள்ளப் பட்ட முயற்சியாகும். ஆனால் அதுதோல்வியில் முடிந்துவிட்டது. இதற்கு முன்பும் பலமுறை பாஜகவினர் தங்கள் முயற்சியில் தோல்விதான் அடைந்தனர். தற்போது ஜனநாயகத்தை நாங்கள் கொலை செய்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர். எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ‘கறுப்புஅத்தியாயம்’ என கூறுகின்றனர்.அப்படி என்றால் அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் என்ன செய்கிறார் கள்? ஜனநாயகத்தின் மீது வெள்ளைச் சாயமா பூசிக் கொண்டிருக்கிறார்கள்?2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை ஒன் றிய அரசு தரவேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் பாஜக ஏன் ரகளையில் ஈடுபட்டு கூச்சல் இடவேண்டும்? அந்தத் தகவல் இருந்தால்தான், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறித்த உரிய புள்ளி விவரங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆணையத்தால் தயாரிக்க முடியும். அதனை பாஜக-வினர் தடுக்கிறார்கள் என்றால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கபாஜக எதிராக உள்ளது என்றுதான்கூற முடியும்.இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.பாஜகவுடன் சிவசேனா மீண் டும் கூட்டணி சேர வாய்ப்பு இல்லைஎன்றும் இந்தப் பேட்டியில் உத்தவ்தாக்கரே உறுதி செய்துள்ளார்.

;