india

img

மோடியை ‘ஷேவிங்’ செய்யச் சொல்லி ரூ.100 அனுப்பிய டீ கடைக்காரர்.... வளர்க்க வேண்டியது வேலைவாய்ப்பை... தாடியை அல்ல....

மும்பை:
பிரதமர் மோடி நீண்ட நாட்களாக தாடி வளர்த்து வரும் நிலையில், அதனை ‘ஷேவிங்’ செய்வதற்கு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ‘டீ’ கடைக்காரர் ஒருவர், 100 ரூபாயை மணியார்டரில் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பாரமதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் மோர். இந்தாப்பூர் பகுதியில் உள்ளதனியார் மருத்துவமனைக்கு எதிரேதொருவோரமாக டீ கடை நடத்தி வருகிறார். இவர்தான் பிரதமர் மோடிக்கு மணியார்டர் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு,‘இந்த நாட்டின் பிரதமர் வளர்க்கவேண்டியது பொருளாதாரத்தைதானே தவிர தாடியை அல்ல!’ என்பதைச் சுட்டிக்காட்டவே அவர் ஷேவிங்செய்து கொள்வதற்காக 100 ரூபாயைஎனது சேமிப்பிலிருந்து மணியார்டர் அனுப்பினேன்’ என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.‘பிரதமர் பதவி நாட்டின் மிகஉயர்ந்த பதவியாகும். நமது பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதைஉள்ளது. ஆனால், அவர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால், மக் களுக்கான வேலைவாய்ப்பை வளர்க்க வேண்டும். தடுப்பூசி போடும்வேகத்தை அதிகரிக்க வேண்டும். தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கங்களால் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துயரங்களிலிருந்து விடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ரூ. 100-ஐஅனுப்பினேன். மற்றபடி அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல!’ என்றும் அனில் மோர் விளக்கம் அளித்துள்ளார்.

;