india

img

‘தாண்டவ்’ வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ. 1 கோடி பரிசு.... கர்னி சேனா இந்துத்துவா கும்பல் பகிரங்க மிரட்டல்....

மும்பை:
நடிகர்கள் சையிப் அலி கான், டிம்பிள் கபாடியா, டிக்மான்ஷு துலியா மற்றும் கிருத்திகா கம்ராஆகியோர் நடித்த வெப் சீரிஸ்  ‘தாண்டவ்’ ஆகும். இந்த வெப் சீரிஸ், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் (amazon prime video)கடந்த ஜனவரி 16 அன்று வெளியானது.

இந்நிலையில், இந்த ‘தாண் டவ்’ வெப் சீரிஸில், இந்துக்களின் கடவுள்களான ராமர் மற்றும் சிவனை அவமதிக்கும் வசனங்களும், பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக ஷியாம் பாபு சுக்லா என்பவர் அளித்த புகாரின் பேரில், இணையதள தொடரின் தலைவர் அப்னாபுரோஹித், தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ண மெஹ்ரா,வசனகர்த்தா கவுரவ் சோலங்கி உள்ளிட்ட 5 பேர் மீது உ.பி. பாஜக அரசுவழக்குப் பதிவு செய்தது.தாண்டவ் கற்பனைக் கதைதான், ஆனாலும் யாரையாவது இந்தப்படம் காயப்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று தாண்டவ் படக்குழுவினர் மன்னிப்புக் கேட்டனர். ஆனால், இந்துத்துவா அமைப்புக்கள் அவற்றை காதில் வாங்கிக் கொள்ளத் தயாரில்லை.

தாண்டவ் வெப் சீரிஸை தடைசெய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா எம்.எல்.ஏ ராம் கதம், பாஜக எம்.பி மனோஜ் கோடாக் ஆகியோர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம்எழுதினர். ஆங்காங்கே ‘தாண்டவ்’விளம்பரங்கள் தீயிட்டுக் கொளுத் தப்பட்டன.இதனிடையே, தாண்டவ் வெப் சீரிஸில் இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் அவமதிக்கும் நபர்களின் நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்குவோம் என்று மகாராஷ்டிர கர்னி சேனா தலைவர் அஜய் செங்கார் பகிரங்க கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

;