india

img

எச்சிலை தின்னச் சொன்ன சாதிப் பஞ்சாயத்து.... 2-ஆவது திருமணம் செய்த பெண்ணுக்குத் தண்டனை.... மகாராஷ்டிர மாநில அவலம்....

அகோலா:
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டம், வாட்கான் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுப் பெண், 2-ஆவதுதிருமணம் செய்து கொண்டதற்காக, சாதிப் பஞ்சாயத் தைக் கூட்டி அந்தப் பெண் ணுக்கு கொடூரமான தண்டனையை வழங்கியுள்ளனர்.சாதிப் பஞ்சாயத்தைச் சேர்ந்த 10 பேர், வாழை இலையில் துப்பும் எச்சிலை, 2-ஆவது திருமணம் செய்துகொண்ட பெண் தின்ன வேண்டும்; அத்துடன் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த வேண் டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், தண்டனையை ஏற்க மறுத்து, துணிச்சலாக- தான் வசித்துவரும்ஜல்கான் மாவட்டத்திலுள்ள சோப்டா நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, சாதிப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் 10 பேர் மீதும், மகாராஷ்டிரா சமூக புறக்கணிப்பு(தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டத்தின் 2016 – 5 மற்றும் 6 பிரிவுகளின் கீழ்போலீசார் தற்போது வழக் குப் பதிவு செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட அந்த பெண், ‘நாத் ஜோகி’ சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த2011-ம் ஆண்டு முதல் திருமணம் செய்த அவர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்னரும் சுமார் 4 ஆண்டுகள் கழித்தே 2019-ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில்தான், அவரின் 2-ஆவது திருமணத்தை ஏற்க மறுத்து, ‘நாத் ஜோகி’ சாதிப் பஞ்சாயத்தில் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளனர்.

;