india

img

கொரோனா இறப்பைக் குறைத்துக் காட்டுகிறோமா..? பிணங்களை தூக்கிவீச உ.பி.போல மும்பையில் ஆறு எதுவும் ஓடவில்லை... பாஜக-வுக்கு சிவசேனா மேயர் பதிலடி....

மும்பை:
‘இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.தலைநகர் மும்பையில் மட்டும்கொரோனா தொற்றால் அதிக மானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுகிறது’ என்று அம்மாநில பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில், ‘ஆற்றுக்குள் உடல்களை தூக்கி வீசிவிட்டு, எண்ணிக்கையை மறைக்கஉத்தரப் பிரதேசம், பீகாரை போன்று மும்பையில் ஆறு எதுவும் ஓடவில்லை’ என பாஜக-வுக்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்த மும்பை மேயர் கிஷோரி பெட்நேகர், பதிலடி கொடுத்துள்ளார்.‘மும்பையில் எந்தவிதமாகவும் தரவுகள் மறைக்கப்படவில்லை. தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தூக்கி எறிவதற்கு மும்பையில் ஆறு எதுவும் இல்லை. இங்கு உயிரிழப்பவர்களின் பதிவுகள் மூன்று இடங்களில் பதிவு செய்யப்படுகிறது. ஆகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க முடியாது’ என்று அவர் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில், மே 10 அன்று கங்கை ஆற்றில் 71 உடல்கள் மிதந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள்தான் இவ்வாறு ஆற்றில் தூக்கி வீசப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைமறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையிலேயே ‘மும்பையில் ஆறு எதுவும் இல்லை’ என்று பெட்நேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

;