india

img

7 கோடி பேருக்கு 3 கிலோ கோதுமை... 2 கிலோ அரிசி.... ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000.... கட்டுமான தொழிலாளர்க்கு ரூ.1500.... கொரோனா ஊரடங்கு நிவாரணம் அறிவித்த மகாராஷ்டிர அரசு....

மும்பை:
கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு காரணமாக, 15 நாட்களுக்கு முழுபொதுமுடக்கத்தை அமல் படுத்தியுள்ள மகாராஷ்டிர மாநில அரசு, மக்களின் பொருளாதார சிரமங்களைக் குறைப்பதற்காக சிறப்பு நிவாரண உதவிகளை அறிவித் துள்ளது.

உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும்2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், வயது முதிர்ந்தவர் களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விகிதம் 2 மாதங்களுக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.மகாராஷ்டிராவில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கும் சாலையோர வியாபாரிகளுக்கும் ரூ. 1500 நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிவாரண உதவிகளுக்காக, மாநில அரசு சார்பில் ரூ.5 ஆயிரத்து 476 கோடிநிதி ஒதுக்கீடும் செய்யப் பட்டுள்ளது.

;