india

img

போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர்: 12 குழந்தைகள் பாதிப்பு

மும்பை, பிப்.02-
மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கிருமி நாசினியை கொடுத்த ஊழியர்களால் 12 குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
போலியோ இல்லாத நிலையை உருவாக்க ஆண்டுதோறும் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. 
அதன்படி, கடந்த ஞாயிறு (ஜன.31) அன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம் காப்சிகோப்ரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட 12 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தைகள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சையின்போது, 12 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்துக்குப் பதிலாக  கிருமி நாசினி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, சுகாதார பணியாளர், மருத்துவர் மற்றும் ஆஷா பணியாளர் ஆகிய மூவரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;