india

img

கொரோனா தொற்று பாதிப்பால் 10 , 12 ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பு

மகாராஷ்டிரத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்ற மிக வேகமாக பரவி உள்ளது. ஒரே நாளில் 168912 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 904 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
இதுகுறித்து மகாராஷ்டிர கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கூறியதாவது,
மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மே மாத இறுதி வாரத்திலும், 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் மாதத்திலும் நடைபெறும். புதுப்பிக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மேலும், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் வாரியத்திற்கும் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்

;