india

img

ஒரே நேரத்தில் 7 கொரோனா நோயாளிகள் பலி - ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா?

மும்பையில் ஒரே நேரத்தில் 7 கொரோனா நோயாளிகள் பலியாகி உள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் புதிதாக 258பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்  மகாராஷ்டிர மாநிலம் மும்பை நாலசோபரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 கொரோனா நோயாளிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வயது மற்றும் இணை நோய்கள் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
இதையடுத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாகவே 7 பேர் உயிரிழந்ததாக கூறி  உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மருத்துவமனை தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;