india

img

பால், நெய், உணவு தானியங்களை வீணாக்குகிறார்கள் என்பதா..? பிராமணர் மனம் புண்படும்படி ஒருவரிகூட இருக்கக் கூடாது.... வரலாறு புத்தகங்களை திருத்த எடியூரப்பா உத்தரவு

பெங்களூரு:
கர்நாடக மாநில 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், பிராமணர்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ள பகுதிகளை நீக்குமாறு, அம்மாநில முதல்வர்எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.பால், நெய், உணவு தானியங்கள் பற்றாக்குறைக்கு, பிராமணர்கள் இப்பொருட் களை யாகத்தில் கொட்டி வீண டிப்பதும், அவர்கள் செய்யும் பல்வேறு சடங்குகளும் ஒருகாரணமாக உள்ளன என்றுகர்நாடக மாநில அரசின் 6-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் வரிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த பாடப்புத்தக வரிகள், தங்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாக பிராமண சங்க நிர்வாகிகள், அண்மையில், முதல்வர்எடியூரப்பாவை சந்தித்து புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய இந்தப் பாடப்பகுதி நீக்கப் படுவதாக கர்நாடக பாஜக அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே அனைத்துவகுப்புகளின் பாடப்புத்தகங்களின் உள்ளடக்கங்களையும் ஆராய்ந்து, பிராமணரைக்குறிப்பிடும் பகுதிகளை நீக்குவதற்கு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக கர்நாடகமாநில கல்வி அமைச்சர் சுரேஷ் குமார் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் 1 முதல் 10-ஆம்வகுப்பு வரையிலான சமூகஅறிவியல் மற்றும் மொழி பாடப்புத்தகங்களில் உள்ளடக்கங்களை ஆராய ஆசிரியர்கள், வல்லுநர்கள் கொண்டகுழுவை அமைக்க வேண் டும் என்றும், 15 நாட்களில் இந்த குழு அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

;