india

img

மீண்டும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம்.... ஜிடிபி மதிப்பை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்....

பெங்களூரு:
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் படித்த உயர் நடுத்தர வர்க்கத்தினரின் அலட்சியம் காரணமாகவே, பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக, கர்நாடக மாநிலபாஜக அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெங்களூருவில் ஏழு மண்டலங்களிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக ஐடி பணியாளர்கள் அதிகம் வசிக்கும் மகாதேவபுரா - வைட்பீல்ட் பகுதியில்கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்த திட்டத்தை உருவாக்க வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி பசவராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமையன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நீடித்தஇந்த ஆலோசனைக் கூட்டத்திற் குப் பின், பாஜக அமைச்சர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் படித்த உயர் நடுத்தர வர்க்கத்தினரின் அலட்சிய செயல்கள் காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

ஏனெனில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன், தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள். மருத்துவர்களிடம் இருந்து நேரடியாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், மறுபுறத்தில், சுற்றியிருக்கும் யாரிடமும் தங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை சொல்வதில்லை. அவர்களில் பலர் தங்கள் வீடுகளில் வேலை செய்பவர்கள் பணிக்கு வரக் கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரே நபர் பல வீடுகளில் வேலை செய்வதாலும் அவர்கள் லிப்ட் உள்ளிட்ட பொது இடங்களைப் பயன்படுத்துவதாலும், தங் களை அறியாமலேயே சூப்பர்ஸ்ப்ரெடர்களாக மாறுகிறார் கள். இதற்குப் படித்தவர்களின் அலட்சியமே முழுக்க முழுக்க காரணம்.எனவே, கடந்த ஆண்டைப் போல கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம்.இவ்வாறு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

;