india

img

நெருக்கடியில் இந்தியாவிற்கு கைகொடுக்கும் உலக நாடுகள் - 5 நாட்களில் 300டன் உதவிப் பொருட்கள்

கொரோனா பேரிடரின் நெருக்கடியான நிலையில் உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன. கடந்த 5 நாட்களில் 300 டன் மருத்துவ உதவிப்பொருட்கள் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்தியாவிற்கு வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரிக்கத்துவங்கி உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை தகவலின் அடிப்படையில்  3,57,229 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,449  பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா   பெருந்தொற்று  காரணமாக இந்தியா கடும் நெருக்கடி நிலையில் உள்ளது. தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும் நீண்டநேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது அன்றாட செய்தியாகிவிட்டது. இந்நிலையில் உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன. கடந்த 5 நாட்களில் 300 டன் உதவிப் பொருட்கள் டில்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், தாய்லாந்து, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல நாடுகள் உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதில் 5,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 3200 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் , 136000 ஆயிரம் ரெம்டெசிவர் மருந்துகள் என கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு தேவையான  பல உதவிப் பொருட்கள் டெல்லி விமான நிலையத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகநாடுகள் பலவும் வழங்கி உள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் மக்களின் உயிரை காப்பாற்றும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 
ஏற்கனவே கொரோனா பேரிடரின் நெருக்கடியான சூழலில் ஐநா உதவ முன் வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதை ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது

;