india

img

ரூ.1,60,000 வரை சம்பளத்தில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 கணக்காளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
பணி: Chartered Accountant

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.50,000- 1,60,000 வரை

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சிஏ மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000+ஜிஎஸ்டி 18% ரூ.1180. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.jobs.hpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2021

மேலும் விவரங்கள் அறிய www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தை அனுகவும்.

;