india

img

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உள்ளது மருத்துவ வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  ஒரே நாளில் 2104 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக  தீவிரமடைந்து  வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரேனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த பாதிப்பு 1,59,30,965 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2,104 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,657 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 1,78,841 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,54,880 ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22,91,428 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 13,23,30,644 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 27 கோடியே 27 லட்சத்து 5 ஆயிரத்து 103  பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 16,51,711 பேருக்கு கொரேனா  சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;