india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவனந்த புரம் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் வியாழனன்று காலை அவசரமாக தரையிறக்கப் பட்டது.

மீண்டும் போராட்டங்கள் எழத்தொடங்கிய நிலை யில், மின்துறை தனியார்மயம் மற்றும் மின் துறை மேம்பாடு தொடர்பாக அனைத்து யூனியன் பிரதேசங்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வியாழனன்று ஏற்பாடு செய்திருந்த காணொலிக் கூட்டம் திடீரென்று ரத்தானது.

இந்தியா - போலந்து இடையே பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜம்சா ஹேப் நினைவு இளைஞர் பரிமாற்றத் திட்டம் என்ற  புதிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 20 போலந்து இளைஞர்கள் இந்தியாவுக்கு அழைக்கப் படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரி வித்துள்ளார்.

தில்லி ஆர்.எம்.எல் மருத்துவமனை பயிற்சி மருத் துவர்கள் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று வியாழனன்று மாலை வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.

ஆந்திர மருந்தாலை விபத்தில் 17 தொழிலாளர் கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், “ஆரஞ்சு மற்றும் சிவப்பு பட்டியலில் உள்ள ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளை நிபுணத்துவம் கொண்ட குழுக்கள் மூலம் அவ்வப்போது சோதனை க்கு உள்ளாக்கி பாதுகாப்பு அம்சங்களை கண்கா ணிக்க வேண்டும்” என நிபுணர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நவீன் பட் நாயக்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருந்தபோது 2018இல் இருந்து இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி களுக்கு அரசின் சார்பில் ஸ்பான்ஸர் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அடை ந்துவரும் விஸ்வரூப வளர்ச்சி ஒரு சாதனை என்பதை விட “கவலைக்குரிய விஷயம்” என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரி வித்துள்ளார்.

புதுதில்லி

பத்ம விருதுக்கு 
செப்.15 வரை சமர்ப்பிக்கலாம்

2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் விண்ணப்பங் களை செப்டம்பர் 15 வரை சமர்ப்பிக்கலாம் என்று ஒன்றிய உள்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொ டர்பாக உள்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில்,”2025 குடியரசு தினத்தை முன்னிட்டுஅறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2025ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம், பரிந்துரை நடைமுறைகள் 2024 மே 01முதல் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக் கான கடைசி தேதி 2024 செப்டம்பர் 15 ஆகும். https://awards.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.