ராமர் கோவில் திறப்பு விழா புறக்கணிப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள முடிவு யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது அல்ல. அயோத்திக்கு சென்று விழாவில் பங்கேற்க யாராவது விரும்பினால் அவர்கள் செல்லலாம். இதனை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களை பொறுத்தவரை, பாஜக முன்னிறுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டோம்.