india

img

2 -வது பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவக்கம்

நாடாளுமன்ற 2 வது பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. இந்த அமர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

2 வது பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. தற்போது 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் சில தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

;