கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக ஒன்றிய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில், கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 9 நீதிபதிகளில், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.