india

img

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணை சோதனை வெற்றி....

புதுதில்லி:
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணை, ஒடிசாமாநிலத்தின் பாலசோர் அருகேஉள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தளத்தில் இருந்து திங்க ளன்று காலை 10:55 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ இந்த சோதனையை மேற்கொண்டது. அக்னி பி ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலை தூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும்ரேடார் நிலையங்களின் மூலம் ஏவுகணை கண்காணிக்கப் பட்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்தது.அக்னி ரக ஏவுகணைகளில் புதிய தலைமுறை மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது. 1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறனை ஏவுகணை பெற்றுள்ளது. இது ரயில் மற்றும் சாலையில் இருந்துஏவப்படும் திறன் கொண்டது. 

;