india

img

இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியுதவி: சுந்தர் பிச்சை அறிவிப்பு

இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்திவிற்கு உதவ கூகுல் நிறுவனம் முன்வந்துள்ளது.
இதுகுறித்து, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள  மோசமான கோவிட் நெருக்கடிக்கு நிவாரணமாக கூகுள் மற்றும் கூகுள் நிறுவனங்கள், கிவ் இந்தியா மற்றும் யுனிசெஃப் மூலமாக மருத்துவப் பொருட்கள் வாங்க 135 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கிறது. அதிக ஆபத்துள்ள சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும்,  முக்கியமான தகவல்களை பரப்பவும் உதவி செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

;