india

img

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று  உறுதி 


ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
‘‘லேசான கொரோனா அறிகுறி இருந்ததால், பரிசோதனை செய்து கொண்டேன். அதில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள், தயவு செய்து அனைத்து பாதுகாப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றவும். பாதுகாப்பாக இருங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி  ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;