india

img

டெல்டா வைரஸ்க்கு எதிராக  66 சதவிகித செயல் திறன் கொண்டது சைகோவ் - டி தடுப்பூசி : சைடஸ் கேடிலா நிறுவனம் 

சைகோவ்-டி தடுப்பூசி கொரோனா மற்றும் டெல்டா வைரஸ்க்கு எதிராக 66% செயல்திறன் கொண்டது என சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் - டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று, டோஸ்களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம், சைடஸ் கேடிலா நிறுவனம் சமர்ப்பித்தது. அதை அவசரக் காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரிக் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.

அதன் கோரிக்கையை ஏற்று, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, சைகோவ்- டி தடுப்பூசியை அவசரக் காலத்தில் பயன்படுத்துவதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது. உலகிலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் டிஎன்ஏ தடுப்பூசி இதுவாகும். 

இந்நிலையில் சைடஸ் கேடிலா நிறுவனம் கூறியதாவது, சைகோவ்-டி தடுப்பூசி கொரோனா மற்றும் டெல்டா வைரஸ்க்கு எதிராக 66% செயல்திறன் கொண்டது. செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படும். அக்டோபர் முதல் மாதந்தோறும் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

;