india

img

யு.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைப்பு

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை ஆண்டுதோறும் யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. அதன்படி 2021-22ஆம் ஆண்டுக்கான தேர்வு 712 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 27 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

;