india

img

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. கொரோனாவின் 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் 168912 பேர் கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
தற்போது இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியல் இரு தவணைகளாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் இரண்டு தவணைககளாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வருகிறது. 
இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து வல்லுநர் குழு இன்று கூடி ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து அவசரகாலத் தேவைக்காக ஸ்புட்னிக்  கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 
ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;