india

img

கோவாக்சினை விட கோவிஷீல்டில் கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை

கோவாக்சினை விட கோவிஷீல்ட்டு கூடுதலான நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின்  இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள்  போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாடெங்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் அதிக அளவிலும், மிகவும் குறைவான இடங்களில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளும் போடப்படுகின்றன.
தற்போது இந்திய மக்கள் தொகையில் 4% குறைவானவர்கள் தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும்  15% குறைவானவர்கள் குறைந்தது ஒரு டோஸை பெற்றுள்ளனர். ஆயினும் கோவிஷீல்ட்டில் கூடுதலான ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு கூறுகள் காணப்படுவதாக டாக்டர் ஏ.கே. சிங் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வின் ஒரு பகுதியான 515 சுகாதார ஊழியர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் கோவாக்சினை விட கோவிஷீல்டில் கூடுதல் நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 
ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் அதனை மருத்துவ துறையினர் ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

;