india

img

தில்லி போராட்டக் களத்தில் 250 பேர் இறந்தது சாதாரணமானது அல்ல.... பதவியிலிருந்து நீக்கினாலும் சரி; விவசாயிகளுக்காக குரல் கொடுப்பேன்.... மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் ஆவேசம்...

புதுதில்லி:
பாஜக முன்னாள் தலைவரும், தற்போது மேகாலயா ஆளுநராக இருப்பவருமான சத்யபால்மாலிக் திடீரென விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசத் துவங்கியுள்ளார். 

“அரசு ஊழியர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டிருக்கும்போது, தாங்கள் விளைவித்த பொருட்களுக்குக் கூட தங்களால் விலை நிர்ணயிக்க முடியாத அவலத்தில் இருக்கிறார்கள்” என்று அண்மையில் அவர் பேசியிருந்தார்.இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கும்தற்போது அவர் பேட்டி அளித் துள்ளார். அதில் மீண்டும் விவசாயிகள் குறித்து சத்யபால் மாலிக்பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஒரு தெருநாயின் உயிரிழப்பு கூட வருந்தத்தக்க செய்தியாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால், தலைநகர் தில்லியில் இதுவரை 250 விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர் துறந்துள்ளனர். இதைப் பற்றி அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை, யாரும் இரங் கல் கூட தெரிவிக்கவில்லை. நான்இது குறித்து பிரதமர் மோடியிடமும், அமித் ஷாவிடமும் பேசினேன். விவசாயிகள் வெறுங்கையுடன் அனுப்பப்படக் கூடாது. அரசு பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்று தெரிவித்தேன்.தில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை, பாஜக தொடர்ந்து அலட்சியம் செய்தால் எதிர்காலத்தில் உ.பி., ஹரியானா, மேற்கு ராஜஸ்தானில் பாஜக வலுவிழக்கும்.ஒருவேளை விவசாயிகளுக்குக் குரல் கொடுப்பதால் நான்அரசாங்கத்தை எதிர்க்கிறேன் என நினைத்தால், நான் ராஜினாமா செய்யவும் தயங்கமாட் டேன். என்னைப் பதவி நீக்கம் செய்தாலும் கவலையில்லை. ஆளுநராக இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன்.என்னால், விவசாயிகளின் நிலைமைகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. பாஜக தலைவர்கள் கிராமங்களை விட்டு வெளியேவர முடியவில்லை. ஏனெனில் எம்.எல்.ஏ.க்களை மக்கள் அடிக்கின்றனர். எனது இந்தப் பேச்சு பாஜக கட்சியை பாதிக்காது. யாராவது நமக்காகப் பேசுகிறார்களே என்று விவசாயிகளைத்தான் யோசிக்க வைக்கும். அரசாங்கத்துக்கு உண்மையிலேயே தீங்கு விளைவிப்பவர்கள் யார் என்றால், விவசாயிகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல் இருப்பவர்கள் தான். 

இவ்வாறு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித் தார்.தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் இதுவரை ஜம்மு - காஷ்மீர், கோவா, மேகாலயா என் மூன்று மாநிலங்களுக்கு சத்யபால் மாலிக் மாற்றப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

;