india

img

ஆப்கானிஸ்தான்: தாலிபன்கள் தாக்குதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் பலி

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய புகைப்டக்கலைஞர் தானிஷ் சித்திக் உயிரிழந்தார். 
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என்று  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆப்கன் - தலிபான்கள் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் இந்திய ராய்ட்டர்ஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர் தானிஷ் சித்திக் சில நாட்களுக்கு முன்னர் ஆப்கன் படைகளுடன் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் கந்தகாரில் நேற்று ஆப்கன் படைகள் - தலிபான்களுக்கு இடையே நடந்த மோதலில் டேனிஷ் உயிரிழந்துள்ளார். 
கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா கடுமையான பாதிப்புக்குள்ளாகும்போது இவர் எடுத்த புகைப்படங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன் விவசாயப் போராட்டம், ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக  இவர் எடுத்த புகைப்படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 
இவர் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
 

;