india

img

மே.3 வரை இந்திய விமானங்கள் ஹாங்காங் வர தடை

இந்தியா கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது.இதனால் உலக அளவில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் தலைநகர் தில்லியில் இன்று இரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 
இதன் காரணமாக,  நாளை (ஏப்ரல் 20ந்தேதி)  முதல்  மே மாதம் 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே  மும்பை – ஹாங்காங் இடையேயான விஸ்தரா விமானங்களை மே 2 ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்து செய்திருந்த நிலையில், தற்போது அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
 

;