india

img

இந்தியாவில் வருடத்திற்கு 1.20 லட்சம் சாலை விபத்து இறப்புகள் பதிவு

புதுடில்லி : இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்படி , 1.20 லட்சம் சாலை விபத்து இறப்புகள் பதிவாகியுள்ளன . இதன்படி ,  ஒரு நாளைக்குச் சராசரியாக 328 இறப்புகள் சாலை விபத்தினால் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது .மேலும் , இந்த எண்ணிக்கையானது , கொரோனா ஊரடங்கின் போதிலும் அதிகளவில் இருப்பது அதிர்ச்சியளித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது  . 

சாலை விபத்துகள் தொடர்பான அலட்சியம் காரணமாக மூன்று ஆண்டுகளில் 3.92 லட்சம் உயிர்கள் பலியாகியுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(NCRB) தனது 2020ஆம் ஆண்டிற்கான 'க்ரைம் இந்தியா' அறிக்கையில் தெரிவித்துள்ளது . இந்த கணக்குப்படி, 2020ல் 1.20 லட்சம் இறப்புகளும் , 2019ல் 1.36 லட்சம் இறப்புகளும் , 2018ல் 1.35 லட்சம் இறப்புகளும் பதிவாகியுள்ளன .

இந்நிலையில் , கடந்த ஆண்டு சராசரியாக நாடு முழுவதும் , ஒவ்வொரு நாளும் 112 ஹிட் மற்றும் ரன் வழக்குகள் பதிவாகியுள்ளன . இதற்கிடையில் , ரயில் விபத்துகள் தொடர்பான அலட்சியம் காரணமாக நாடு முழுவதும் 2020ல் 52 வழக்குகளும் , 2019ல் 55 வழக்குகளும் , 2018ல் 35 வழக்குகளும் பதிவாகியுள்ளன .

இந்த கோவிட் பொது முடக்கத்தின் காலத்தில் , அதாவது கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி , பெண்கள் , குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு எதிரான மற்றும் கொலை , கொள்ளை  குற்றங்கள் குறைந்துள்ளது எனவும் , கோவிட் அமலாக்கத்திற்கு கீழ்படியாமையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது  .

;