india

img

உலகில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்!

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் பில்லியனர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 177 பில்லியன் டாலர் ஆகும்.

இரண்டாவது இடத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 151 பில்லியன் டாலர் ஆகும்.

மேலும், இந்தியாவை சேர்ந்த அம்பானி உலக பில்லியனர்களின் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 84.5 பில்லியன் டாலர்.

அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, உலகளாவிய பில்லியனர்களின் பட்டியலில் 24 வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 50.5 பில்லியன் டாலர்.

எச்.சி.எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் சிவ் நாடார், உலகளவில் 23.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன்  71 வது இடத்தில் உள்ளார்.

பூனவல்லா குழுமத்தின் தலைவரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் பூனவல்லா, 169 வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 12.7 பில்லியன் டாலர்.

;