india

img

இந்தியா கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ளும் அபாயம்

2024 செப்டம்பரில் லா நினா  நிகழ்வு தொடங்க உள்ள தால், இந்தியா மிகக் கடு மையான குளிர்காலத் திற்கு தயாராகி வரு கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்ச ரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், “லா நினா நிகழ்வு நாடு முழுவதும் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவை ஏற் படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லா நினா வெப்பமான நிலைமைகளைக் கொண்டு வரும் எல் நினோவுக்கு நேர் மாறானது. இதனால் இந்தியாவின் பல் வேறு பகுதிகள் குளிர்காலத்தின் வெவ் வேறு அளவுகளை அனுபவிக்கும் சூழல் உருவாகலாம். இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் வெப்பநிலை 3°C வரை குறைந்து  அதீத அளவிலான குளிர்ந்த நிலைமைகளை எதிர்கொள் ளக்கூடும். இந்த குளிர்ந்த வானிலை மற்றும் அதிகரித்த மழைப்பொழிவின் கலவை விவசாயத்தை பாதிக்கக்கூடும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.