india

img

சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி சாதனை!


தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.


புதுடெல்லியில், 2019-ஆம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார்.


தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல், நிர்வாகம், சட்டம், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, உருவாக்கப்படும் பட்டதாரிகளின் நிலை போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதில், ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் தரவரிசையில், தேசிய அளவில் சென்னை ஐஐடி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி இரண்டாம் இடத்தையும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை ஐஐடி இந்த ஆண்டு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், பொறியியல் பிரிவிலும் சென்னை ஐஐடி தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. இதை அடுத்து, இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அடல் கண்டு பிடிப்பு நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது.


;