india

img

பட்டதாரிகளுக்கு ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு!

இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம் பின்வருமாறு;

விளம்பர எண்.1/ 2020-21
நிறுவனம்: இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI)
பணி: Specialist Cadre Officers
மொத்த காலியிடங்கள்: 134

1. DGM (Grade D) - 11    வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. AGM (Grade C) - 52    வயதுவரம்பு: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. Manager ( Grade B) - 62   வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. Assistant Manager (Grade A) - 09     வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிஇ, பி.டெக், பி.எஸ்டி., இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: தெரிவுத் தேர்வு (ஸ்கிரினீங் தேர்வு), குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2021 

மேலும் விவரங்களுக்கு : https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21.pdf

;