india

img

வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு ரூ.37.36 லட்சம் நிதியுதவி!

வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு ரூ.37.36 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போதைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து சொல்ல மாளாத துயரத்திற்கு நான் ஆளாகி உள்ளேன். 
இந்தியாவில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன்.
என்னுடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனப்பான்மையை கண்டறிந்த உலக மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். என்னால் முடிந்தது 50000 அமெரிக்க டாலர். (இந்திய மதிப்பில் 37,36,590 ரூபாய்). இது ஒரு தொடக்கம் தான்.
நமது உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து மக்களின் வாழ்வில் ஒளி சேர்ப்போம். எனது பங்களிப்பு பெரிய திட்டங்களை செயல்படுத்த எந்த அளவிற்கு உதவும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் சிலரது வாழ்வில் ஒரு சின்ன மாற்றமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

;