india

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணி

புதுதில்லி, 07-

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகளின் மாபெரும் போராட்டம் 43ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது வரை போராட்டத்தில் 70ற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
ஏழு கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், கிழக்கு, மேற்கு தில்லி உள்பட தில்லியின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ஹரியாணாவின் குண்லி, மானேசர், பல்வால் ஆகிய தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஸான் யூனியன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகத் கூறுகையில், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினவிழாவில் நடைபெறும் டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணி நடைபெறுகிறது. நாளை மத்திய அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். என்று கூறினார்.

;