india

img

ரூ.99 ஆயிரம் வரை சம்பளம்; தர நிர்ணய கழகத்தில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தர நிர்ணய கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்: 
பணி
:
Scientist-‘B’
Agriculture Engineering - 02
Bio-Medical Engineering - 02
Chemistry - 04
Computer Engineering - 02
Electrical Engineering - 04
Environment Engineering - 02

சம்பளம்: மாதம் ரூ.99,969

வயதுவரம்பு: 26.08.2022 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி பட்டம் பெற்று GATE-2020,2021,2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் GATE-2020,2021,2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் குறித்த விவரம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.bis.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.bis.gov.in/wp-content/uploads/2022/08/1-Detailed-Advetisement-English-29-07-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;