india

img

தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு!

2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி, நாடு முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவடைந்தது.
2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் (மார்ச் 16) இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்து, கடந்த ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவடைந்தது.