india

img

நியூஸ்கிளிக் ஊடகம் மீதான ரெயிடு - தில்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

புதுதில்லி, பிப்.9-
நியூஸ்கிளிக் என்னும் இணைய ஊடகத்தின் மீதும், அதன் உரிமையாளர்/ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா, ஆசிரியர் பிரஞ்சால் மற்றும் மனிதவள தலைவர் (Human Resources Head) அமித் சக்ரவர்த்தி வீடுகளிலும் இன்றையதினம் (9-2-21) அமலாக்கத்துறையினர் சோதனை (ரெயிடு) மேற்கொண்டிருப்பதற்கு, தில்லி பத்திரிகையாளர் சங்கம் (டியுஜே) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனைகள் இணைய வழி ஊடகங்கள் மீதும், ஊடக சுதந்திரத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான தாக்குதல் என்று நாங்கள் பார்க்கிறோம். கடந்த வாரம் மூத்த இதழாளர்கள் சிலர் மீது தேசத்துரோகக் குற்றப்பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து இப்போது அரசாங்கம் இதுபோன்று ட்விட்டர், யு ட்யூப் போன்றவற்றின் பேச்சு சுதந்திரத்தின் மீதும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது தீய அறிகுறிகளாகும். இதன் நோக்கம் சுதந்திரமான மற்றும் நடப்பு பிரச்சனைகள் மீது அரசை விமர்சித்திடும் ஊடகங்களை மிரட்டும் செயல் என்பது  தெளிவாகத் தெரிகிறது.
இவ்வாறு தில்லி பத்திரிகையாளர் சங்கம் கூறியுள்ளது.

;