india

img

இந்தியாவில் உச்சமடையும் கொரோனா: ஒரே நாளில் 3.86 லட்சம் பேருக்கு தொற்று 

இந்தியாவில் ஒரே நாளில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் படுக்கைகள், மருந்துகள் ஆக்ஸிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இன்று காலை கொரோனா தொற்று விபரங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3498 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பாதிப்பால்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,08,330 ஆக உயர்ந்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,97,540 பேர் குணமடைந்துள்ளனர்.  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,84,418 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக தற்போது 31,70,228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 15,22,45,179 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;